ஏக
இறைவனின் திருப்பெயரால்....
وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ
وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ
السَّوْءِ عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ
وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ وَسَاءتْ مَصِيرًا {6
நயவஞ்சகர்களான
ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொண்ட இணை கற்பிக்கும் ஆண்களையும்,
பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு
உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தான்.6 அவர்களுக்கு நரகத்தைத்
தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது.
திருக்குர்ஆன்.48:6
நயவஞ்சகத்தின் நான்கு அடையாளங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்...
பொய் பேசுவதால் ஏற்படும்
உலக-மறுமை இழப்புகளை இதுவரை தொடர்ந்துப் பார்த்து வருகிறோம்.
பொய் பேசி, பொய்யான
செயல்களில் ஈடுபட்டு அதனால் அடையும் ஆதாயமும் கூட பொய்யர்களுக்கு நிரந்தரமாக அமைவதில்லை,
அதுவும் அற்பத்திலும் அற்பம் தான்.
அற்ப சந்தோஷத்துடன்
விட்டாலாவது பரவா இல்லை எனலாம், அதுவுமில்லை அற்ப சந்தோஷத்தை அளித்து விட்டு நிரந்தர
நிம்மதியைப் பறித்து விடும் என்பதை இதற்கு முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம்.
உலகில் இப்படி என்றால்
மறுமையில் எப்படி இருக்கும் ? என்பதை சிந்தித்துப் பாரத்துக் கொள்ளுங்கள்.
மரணத்திற்குப் பின்
கியாமத் நாள் வரை பொய் பேசுபவருடைய தாடையிலிருந்து பிடரி வரை பலமான இரும்பு கொக்கியால்
இழுத்த வண்ணமே இடைவிடாது நடைபெறும் வேதனை !.
யாருக்கு மறுமையின்
மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் நிரந்தரமான மறுமை வாழ்வுக்கு இடையூறாக
அமையும் பொய்யை பேச விரும்ப மாட்டார்கள், பொய் பேசி வியாபாரம் செய்ய விரும்ப மாட்டார்கள்,
பொய் சத்தியம் செய்து காரியம் சாதிக்கத் துணிய மாட்டார்கள்.
யாருக்கு மறுமையின்
மீது அறவே நம்பிக்கை இல்லையோ அவர்களே பொய் பேசுவார்கள், பொய் பேசி வியாபாரம் செய்ய
விரும்புவார்கள், பொய் சத்தியம் செய்து காரியம் சாதித்துக் கொள்ளத் துணிவார்கள்.
மீட்சி
பெற முடியாத பாவம்.
பொய் பேசுவது, பொய்யான
செயல்களில் ஈடுபடுவது மொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் கொடிய வைரஸ் என்பதால் பொய்யர்கள்
ஏதாவது ஒரு வழியில் நுழைந்து தப்பித்து விடக்கூடாது என்பதற்காக மறுமையை மறுத்து அல்லது
மறந்து உலக சுகபோக வாழ்வுக்காக பொய்யில் ஊறித் திளைக்கும் பொய்யர்களை இறுதியாக முனாஃபிக்குகளின்
பட்டியலில் சேர்த்து அவர்களை நரகிற்கு உரியவர்களாக்கி விட்டது இஸ்லாம்.
நான்கு
குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு
குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டு விடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு
குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும ;போது
பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால்
அவமதிப்பான். 2459. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சத்தியத் தூதர்(ஸல்)
அவர்கள் சத்திய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கால கட்டத்தில் முஸ்லிம்களை சந்திக்கும்
பொழுது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இஸ்லாத்தை எதிர்ப்போரை சந்திக்கும்
பொழுது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு இஸ்லாத்தில் பெயரளவு நுழைந்து
கொண்டு இரட்டை வேடம் பூண்டனர் யூதர்கள்.
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்''
எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன்5 தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச்
சேர்ந்தவர் களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர். . திருக்குர்ஆன்.
2:14
இரு
தரப்பிலும் தங்களுடைய ஆட்களாக காட்டிக்கொண்டவர்கள் இஸ்லாத்தில் உள்ளதை இல்லாதது போலும்
இல்லாததை உள்ளது போலும் கூறிக் கொண்டு இஸ்லாத்தை ஏற்ற மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை
விளைவித்து மொத்த மக்களுடைய நிம்மதியையும் இழக்கச் செய்து வந்தனர்.
அல்லாஹ்வைப் பற்றி
தவறான எண்ணம் கொண்டு அவனுடைய மார்க்க விஷயத்தில் பொயு;யுரைத்து வந்தக் காரணத்தால் அல்லாஹ்
அவர்கள் மீது கோபம் கொண்டு சாபமிட்டு முனாஃபிக் என்ற இழிச் சொல்லைச் சூட்டி நரகிற்கு
உரியவர்களாக்கினான்.
நயவஞ்சகர்களான
ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொண்ட இணை கற்பிக்கும் ஆண்களையும்,
பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு
உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தான். அவர்களுக்கு நரகத்தைத்
தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது. திருக்குர்ஆன்.
48:6.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டிய பொய் பேசுதல், வாக்குறுதி மீறுதல், ஒப்பந்த மோசடி செய்தல்,
வழக்காடும் போது பிரதிவாதியை ( வசமாக மாட்டிக்கொண்டான் என்றுக் கருதி ) அவனுடைய சொந்த
காரியங்கள், குடும்ப நிகழ்வுகளைப் பேசி அவமதிப்பது போன்ற துர்குணங்கள் நான்கும் பொய்
வகையைச் சார்ந்தவைகளாகும்; அதனால் இதில் எதாவது ஒன்று யாரிடம் இருந்தாலும் அவன் முனாஃபிக்காகி
விடுவான் என்று எச்சரிக்கை செய்தார்கள், முனாபிக்குக்குரிய தண்டனை நரகம் தான்.
நரகிலிருந்து நம்மை
காக்கவே இஸ்லாம் எனும் அருட்கொடையை இறைவன் நமக்கு வழங்கினான். ஆனால் பொய் பேசி, பொய்யானக்
காரியங்களில் ஈடுபட்டு இறைவனின் அருட்கொடையை நிராகரித்து விட்டு நரகிற்கு நாமே நம்மை
தள்ளிக் கொள்ளலாமா ?. சிந்தித்தால் சீர் பெறலாம்.
நாம் நம்முடைய ஒவ்வொரு தொழுகையிலும் வல்லோன் அல்லஹர்விடம் எங்களை
நேர் வழியில் செலுத்துவாயாக! அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள்
(உன்னால்) கோபிக்கப் படாதவர்கள் மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள். வழி. என்று கேட்கின்றோம்.
எல்லாப்
புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். 2. அளவற்ற அருளாளன்.
நிகரற்ற அன்புடையோன். 3. தீர்ப்பு நாளின்1 அதிபதி. 4. (எனவே) உன்னையே வணங்குகிறோம்.
உன்னிடமே உதவியும் தேடுகிறோம். 5. எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! 6இ 7. அது நீ
யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள்இ மற்றும்
பாதை மாறிச் செல்லாதவர்கள்.
தொழுகையை முடித்து
விட்டு வந்து அவனுடைய கோபத்திற்கு ஆளான யூதர்களின் வழியை நாமே தேர்ந்தெடுத்தக் கொள்ளலாமா
? சிந்தித்தால் சீர் பெறலாம்.
அதனால் அல்லாஹ்வின்
கோபத்திற்கு ஆளான யூதர்களின் பொய் பேசும் பழக்கத்திலிருந்து உடனடியாக விலகிக் கொள்ள
வேண்டும்.
இதுவரை பேசி வந்த பொய்களுக்கு,
பொய் பேசி செய்து வந்த வியாபாரங்களுக்கு, பொய் சத்தியம் செய்து அற்பசந்தோஷத்தை அடைந்து
கொண்டதற்கு இன்னும் வேறு வழிகளில் ஈடுபட்டு வந்த பொய்யானக் காரியங்களுக்காக அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புத் தேடிக் கொ ண்டால் அளவற்ற அருளாலனும், நிகரற்ற அன்புடையயோனுமாகிய
அல்லாஹ் மன்னித்து விடுவான்.
யாரேனும்
தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத்
தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார். திருக்குர்ஆன்
4:110.
கடந்த காலங்களில் பேசிய
பொய்கள் மற்றும் பொய்யான செயல்கள் அதிகமானவைகள் அவைகள் குறைத்து மதிப்பிடக் கூடியவைகள்
அல்ல ? ஒவ்வொன்றும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியவைகள், நினைத்துப் பார்க்கவே வெட்கமாகவும்
அறுவருப்பாகவும் இருக்கிறது ! அதனால் அவைகளை எப்படி அல்லாஹ் மன்னிப்பான் ?.
என்று அல்லாஹ்வின்
அள்வற்ற அருளின் மீதும், நிகரற்ற அன்பின் மீதும் நம்பிக்கை இழந்து பொய்யில் தொடர்ந்து
வீழ்ந்து விடாமல் இனி வரும் காலங்களில் பொய் பேசுவதில்லை, பொய்யான செயல்களில் ஈடுப்படுவதில்லை
என்று முடிவு செய்து அல்லாஹ்விடம் அழுது கேளுங்கள் அவைகள் மலை அளவு இருந்தாலும் அல்லாஹ்
மன்னித்து விடுவான்.
தமக்கு
எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்!
பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன்
என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! திருக்குர்ஆன் 39:53.
எழுதியபடி என்னையும் வாசித்தப்படி
உங்களையும் அமல் செய்யும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى
الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ
وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும்
சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக