திங்கள், 4 மார்ச், 2013

வேதத்தின் பெயரால் அடுத்த பொய்.



ஏக இறைவனின் திருப்பெயரால்....

وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُم بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ اللّهِ وَمَا هُوَ مِنْ عِندِ اللّهِ وَيَقُولُونَ عَلَى اللّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ {78}


அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு445 மறுமையில் எந்த நற்பேறும் இல்லை.64 கியாமத் நாளில்1 அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.திருக்குர்ஆன் 3:77.





வேதத்தின் பெயரால் அடுத்த பொய்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த கட்டுரையில் யூதர்கள் எப்படிப் பட்டப் பொய்யர்;;கள் என்பதைப் பார்த்தோம். அதில் அவர்களுடன் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் அவரை நல்லவரின் மகன் நல்லவர் என்று போற்றிப் புகழ்ந்துரைத்ததையும்> இஸ்லாத்தை ஏற்ற மறுகனமே கெட்டவரின் மகன் கெட்டவர் என்று தூற்றி இடிந்துரைத்ததையும் பார்த்தோம்.

இவர்கள் இப்படிப்பட்ட புரட்டுப் பேர்வழிகள் தான்> தேவைப்படும் போது புரண்டு பேசக் கூடியவர்கள் தான் என்பதை முன் கூட்டியே நபியவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள் சொல்லவும் செய்திருந்தார்கள்.

இன்னும் யூதர்களின் சில பொய்> புரட்டு பித்தலாட்டங்களை இயன்றவரைப் பார்த்தால் தான் பொய் பேசும் பழக்கம் நம்மில் யாரிடமாவது இருந்தால் அதை ஒழித்துக் கட்டுவதற்கு வாய்ப்பாக அமையும்.

அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி)அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் இணைந்திருப்பதை வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

மதீனாவின் ஆட்சி தலைவராக அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் நியமிக்கப்பட்டிருந்த காரணத்தால் மதீனாவின் குடிமக்கள் அனைவருடைய வழக்குகளும் அவர்களிடமே கொண்டு வரப்படும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அவற்றை ஆராய்ந்து தீர்ப்பளிப்பவர்களாகவும் இருந்தார்கள். ஒரு நாள் யூதர்களில் விபச்சாரம் செய்த இருவரின் வழக்கு அவர்களிடம் கொண்டு வரப்பட்டது.

உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள் உஷாராகி விட்டார்கள் கண்டிப்பாக யூதர்கள் இதில் தங்கள் கை(பொய்) வேலையை காண்பிப்பார்கள் என்பதை அறிந்து வைத்திருந்ததால் அவர்களின் பொய் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் என்ற நோக்கில் வழக்கின் வாதப் பிரதி வாதத்தை கூர்ந்து கவனிக்கலானார்கள். 
விசாரனை தொடங்கியதும் இதற்கு முன் விபச்சார வழக்கிற்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள் என்று யூதர்களிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கேட்க ?.

முகத்தில் கரும் புள்ளிக் குத்தி அடிப்போம் என்று யூதர்கள் பதிலளிக்க !.

உங்கள் வேதத்தில் கல்லெறி தண்டனை சொல்லப்பட்டிருக்கையில் கரும்புள்ளி குத்தும் தண்டனையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கேட்க ?.

அவ்வாறு சொல்லப்பட வில்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக ஒரே பதிலில் யூதர்கள் முடித்துக் கொண்டனர்!.

கல்லெறி தண்டனை தான் சொல்லப்பட்டுள்ளது என்று அவர்களை அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள் அசுர வேகத்தில் குறுக்கிட்டு வேதத்தைக் கொண்டு வரும்படி யூதர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.  

அவ்வாறே வேதம் கொண்டு வரப்பட்டது.


யூதர்களுடன் வேதத்தைக் கற்றறிந்த அறிஞர் ஒருவரும் உடன் வந்தார். தவ்றாத் வேதத்தில் கல்லெறி தண்டனையைப் பற்றிக் கூறும் பக்கத்தை ஓத ஆரம்பித்தார். ஆனால் அதன் பக்கத்தில் (Page) கையை வைத்து மறைத்து ஓதினார். (இவ்வாறு ஓத வேண்டும் என்று பிராடு பேர்வழிகளாகிய யூதர்கள் சொல்லி அழைத்து வந்தது.)

இவர்களின் பொய்;> புரட்டு> தில்லு முள்ளு> திருகு தாளத்தை நன்கு அறிந்து ஏற்கனவே உஷாராகி இருந்த அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள் அந்த அறிஞ(?)ர் கள்ளத்தனமாக கையை வைத்து மறைத்து ஓதியதைப் பார்த்து அவருடைய கையை நகர்த்தி விட்டு உள்ளதை உள்ள படி ஓதச் செய்து மக்களுக்கு உண்மையை அறியச் செய்தார்கள்.

அதன் அறிவிப்பு வருமாறு:

நபி(ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி(ஸல்) அவர்கள்> 'உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள் 'நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள்> '(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) 'ரஜ்கி' (சாகும்வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா?' என்று கேட்க> யூதர்கள்> '(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை'' என்று பதிலளித்தனர். உடனே> (யூ மார்க்க அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி)> யூதர்களிடம்> 'பொய் சொன்னீர்கள்> நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்'' என்று கூறினார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது). அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் 'ரஜ்கி' தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக்கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தைவிட்டு இழுத்துவிட்டு> 'இது என்ன?' என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது 'இது ரஜ்முடைய வசனம்'' என்று கூறினார்கள். எனவே> (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே> அவ்விருவருக்கும் மஸ்ஜிதுந் நபவியில் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக்காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே கல்லெறி தண்டனை தரப்பட்டது.

அந்தப் பெண்ணின் நண்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவளின் மீது கவிழ்ந்து கொள்வதை பார்த்தேன்

ஆதார நூல்: புகாரி 4556.  
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) அவர்கள்.

கடந்த கட்டுரையில் குறிப்பிட்ட நாட்களைத் தவிற எங்களை நரகம் தீண்டாது என்று பாமர மக்களிடத்தில் கூறி தங்களை வேத விற்பன்னர்களாக காட்டிக் கொண்ட பித்தல்லாட்டத்தை பொய் என்று வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறி அவர்களின் பொய் முகத்தை அம்பலப் படுத்தினான்.

இப்பொழுது அவர்கள் கை வசம் உள்ள வேத்தில் எழுதப்பட்டுள்ளதையே மாற்றி அதுவும் இறைத்தூதரிடத்தில் கூறி பொது இடத்தில் கேவலப் பட்டனர்

உலக அதிபதியாகிய வல்லமை பொருந்திய அல்லாஹ் குர்ஆன் நெடுகிலும் மார்க்;கத்தை அற்ப விலைக்கு விற்காதீர்கள் என்று இவர்களைத் தான் சாடுகிறான்.

இன்றும் குற்றச் செயல்களிலிருந்து இலகுவாக வெளியேறி விடுவதற்காக குர்ஆன் - ஹீதீஸில் கூறப்படாதவற்றை மார்க்க சட்டமாக்கி (சிறு சிறு குச்சிகளை மொத்தமாக்கி ஒரே தடவை முதுகில் தடவி விட்டு) அனுப்பி விடுவது போன்ற சட்டம் இயற்றியவர்கள் கண்டிப்பாக யூதர்களின் நடைமுறையைப் பின்பற்றியவர்களாவார்கள்.

3:77. அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும்> தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை.64 கியாமத் நாளில்1 அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

யூத அறிஞர் கல்லெறி தண்டனை கூறும் பக்கத்தில் கைகளை வைத்து மறைத்து ஓதியதற்கும்> குர்ன் - ஹதீஸில் சொல்லப்பட்டவற்றிற்கு மாற்றமான சட்டமியற்றியவர்களுக்கும்  என்ன வித்தியாசம் இருக்கிறது

அல்லாஹ் கூறி எச்சரிக்கை செய்த மார்க்கத்தை அற்ப விலைக்கு விற்காதீர்கள் என்ற வசனத்துக்கு சொந்தக் காரர்;களாகவும் ஆவார்;கள் நரகம் எச்சரிக்கை.

யூதர்களின் பொய் புரட்டுகளையும்> கள்ள சத்தியங்களையும் இன்னும் சிலவற்றைப் பார்த்தால் தான் முஸ்லீம்களிடம் ஒட்டியுள்ள யூதர்களிடமிருந்து தொற்றிக்கொண்டப் பொய்யை முழுமையாகத் துடைத்தெறிய உதவும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக