திங்கள், 24 ஜூன், 2013

நயவஞ்சகத்தின் நான்கு அடையாளங்கள்.



ஏக இறைவனின் திருப்பெயரால்....

وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ وَسَاءتْ مَصِيرًا {6

நயவஞ்சகர்களான ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொண்ட இணை கற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தான்.6 அவர்களுக்கு நரகத்தைத் தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது. திருக்குர்ஆன்.48:6


நயவஞ்சகத்தின் நான்கு அடையாளங்கள். 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பொய் பேசுவதால் ஏற்படும் உலக-மறுமை இழப்புகளை இதுவரை தொடர்ந்துப் பார்த்து வருகிறோம்.

பொய் பேசி, பொய்யான செயல்களில் ஈடுபட்டு அதனால் அடையும் ஆதாயமும் கூட பொய்யர்களுக்கு நிரந்தரமாக அமைவதில்லை, அதுவும் அற்பத்திலும் அற்பம் தான்.

அற்ப சந்தோஷத்துடன் விட்டாலாவது பரவா இல்லை எனலாம், அதுவுமில்லை அற்ப சந்தோஷத்தை அளித்து விட்டு நிரந்தர நிம்மதியைப் பறித்து விடும் என்பதை இதற்கு முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம்.

உலகில் இப்படி என்றால் மறுமையில் எப்படி இருக்கும் ? என்பதை சிந்தித்துப் பாரத்துக் கொள்ளுங்கள்.

மரணத்திற்குப் பின் கியாமத் நாள் வரை பொய் பேசுபவருடைய தாடையிலிருந்து பிடரி வரை பலமான இரும்பு கொக்கியால் இழுத்த வண்ணமே இடைவிடாது நடைபெறும் வேதனை !.

யாருக்கு மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் நிரந்தரமான மறுமை வாழ்வுக்கு இடையூறாக அமையும் பொய்யை பேச விரும்ப மாட்டார்கள், பொய் பேசி வியாபாரம் செய்ய விரும்ப மாட்டார்கள், பொய் சத்தியம் செய்து காரியம் சாதிக்கத் துணிய மாட்டார்கள்.

யாருக்கு மறுமையின் மீது அறவே நம்பிக்கை இல்லையோ அவர்களே பொய் பேசுவார்கள், பொய் பேசி வியாபாரம் செய்ய விரும்புவார்கள், பொய் சத்தியம் செய்து காரியம் சாதித்துக் கொள்ளத் துணிவார்கள்.

மீட்சி பெற முடியாத பாவம்.
பொய் பேசுவது, பொய்யான செயல்களில் ஈடுபடுவது மொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் கொடிய வைரஸ் என்பதால் பொய்யர்கள் ஏதாவது ஒரு வழியில் நுழைந்து தப்பித்து விடக்கூடாது என்பதற்காக மறுமையை மறுத்து அல்லது மறந்து உலக சுகபோக வாழ்வுக்காக பொய்யில் ஊறித் திளைக்கும் பொய்யர்களை இறுதியாக முனாஃபிக்குகளின் பட்டியலில் சேர்த்து அவர்களை நரகிற்கு உரியவர்களாக்கி விட்டது இஸ்லாம்.

நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டு விடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும ;போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான். 2459. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சத்தியத் தூதர்(ஸல்) அவர்கள் சத்திய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கால கட்டத்தில் முஸ்லிம்களை சந்திக்கும் பொழுது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இஸ்லாத்தை எதிர்ப்போரை சந்திக்கும் பொழுது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு இஸ்லாத்தில் பெயரளவு நுழைந்து கொண்டு இரட்டை வேடம் பூண்டனர் யூதர்கள்.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன்5 தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர் களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர். . திருக்குர்ஆன். 2:14

இரு தரப்பிலும் தங்களுடைய ஆட்களாக காட்டிக்கொண்டவர்கள் இஸ்லாத்தில் உள்ளதை இல்லாதது போலும் இல்லாததை உள்ளது போலும் கூறிக் கொண்டு இஸ்லாத்தை ஏற்ற மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை விளைவித்து மொத்த மக்களுடைய நிம்மதியையும் இழக்கச் செய்து வந்தனர்.

அல்லாஹ்வைப் பற்றி தவறான எண்ணம் கொண்டு அவனுடைய மார்க்க விஷயத்தில் பொயு;யுரைத்து வந்தக் காரணத்தால் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டு சாபமிட்டு முனாஃபிக் என்ற இழிச் சொல்லைச் சூட்டி நரகிற்கு உரியவர்களாக்கினான்.

நயவஞ்சகர்களான ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொண்ட இணை கற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தான். அவர்களுக்கு நரகத்தைத் தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது. திருக்குர்ஆன். 48:6.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டிய பொய் பேசுதல், வாக்குறுதி மீறுதல், ஒப்பந்த மோசடி செய்தல், வழக்காடும் போது பிரதிவாதியை ( வசமாக மாட்டிக்கொண்டான் என்றுக் கருதி ) அவனுடைய சொந்த காரியங்கள், குடும்ப நிகழ்வுகளைப் பேசி அவமதிப்பது போன்ற துர்குணங்கள் நான்கும் பொய் வகையைச் சார்ந்தவைகளாகும்; அதனால் இதில் எதாவது ஒன்று யாரிடம் இருந்தாலும் அவன் முனாஃபிக்காகி விடுவான் என்று எச்சரிக்கை செய்தார்கள், முனாபிக்குக்குரிய தண்டனை நரகம் தான்.  

நரகிலிருந்து நம்மை காக்கவே இஸ்லாம் எனும் அருட்கொடையை இறைவன் நமக்கு வழங்கினான். ஆனால் பொய் பேசி, பொய்யானக் காரியங்களில் ஈடுபட்டு இறைவனின் அருட்கொடையை நிராகரித்து விட்டு நரகிற்கு நாமே நம்மை தள்ளிக் கொள்ளலாமா ?. சிந்தித்தால் சீர் பெறலாம்.

நாம் நம்முடைய ஒவ்வொரு தொழுகையிலும் வல்லோன் அல்லஹர்விடம் எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள் மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள். வழி. என்று கேட்கின்றோம்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். 2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். 3. தீர்ப்பு நாளின்1 அதிபதி. 4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். 5. எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! 6இ 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள்இ மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

தொழுகையை முடித்து விட்டு வந்து அவனுடைய கோபத்திற்கு ஆளான யூதர்களின் வழியை நாமே தேர்ந்தெடுத்தக் கொள்ளலாமா ? சிந்தித்தால் சீர் பெறலாம்.

அதனால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான யூதர்களின் பொய் பேசும் பழக்கத்திலிருந்து உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும்.


இதுவரை பேசி வந்த பொய்களுக்கு, பொய் பேசி செய்து வந்த வியாபாரங்களுக்கு, பொய் சத்தியம் செய்து அற்பசந்தோஷத்தை அடைந்து கொண்டதற்கு இன்னும் வேறு வழிகளில் ஈடுபட்டு வந்த பொய்யானக் காரியங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொ ண்டால் அளவற்ற அருளாலனும், நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ் மன்னித்து விடுவான்.

யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார். திருக்குர்ஆன் 4:110.

கடந்த காலங்களில் பேசிய பொய்கள் மற்றும் பொய்யான செயல்கள் அதிகமானவைகள் அவைகள் குறைத்து மதிப்பிடக் கூடியவைகள் அல்ல ? ஒவ்வொன்றும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியவைகள், நினைத்துப் பார்க்கவே வெட்கமாகவும் அறுவருப்பாகவும் இருக்கிறது ! அதனால் அவைகளை எப்படி அல்லாஹ் மன்னிப்பான் ?.

என்று அல்லாஹ்வின் அள்வற்ற அருளின் மீதும், நிகரற்ற அன்பின் மீதும் நம்பிக்கை இழந்து பொய்யில் தொடர்ந்து வீழ்ந்து விடாமல் இனி வரும் காலங்களில் பொய் பேசுவதில்லை, பொய்யான செயல்களில் ஈடுப்படுவதில்லை என்று முடிவு செய்து அல்லாஹ்விடம் அழுது கேளுங்கள் அவைகள் மலை அளவு இருந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! திருக்குர்ஆன் 39:53.

எழுதியபடி என்னையும் வாசித்தப்படி உங்களையும் அமல் செய்யும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!. 

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

செவ்வாய், 28 மே, 2013

காணாததை கனவில் கண்டதாக பொய் சொல்வது தீமையும், பெரும் பாவமுமாகும்.



ஏகஇறைவனின் திருப்பெயரால்....

إِنَّ اللّهَ لاَ يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاء وَمَن يُشْرِكْ بِاللّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا {48}

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். திருக்குர்ஆன். 4:48.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, பொய் சொல்லி வியாபாரம் செய்வது போன்ற மோசடிகள் இம்மை – மறுமை வாழ்வுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடியவைகள் கூடியவைகள் என்பதை கடந்தக் கட்டுரையில் அறிந்தோம்.

காணாததை கனவில் கண்டதாக பொய் சொல்வது தீமையும், பெரும் பாவமுமாகும்.

நல்ல மனிதர் காணும் கனவு நுபுவ்வத்தில் 46ல் ஒரு பங்கு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை சிலர் தமது எதிர்கால திட்டமிடலுக்காக தவறாக பயன்படுத்திக் கொள்வதுண்டு.

உதாரணத்திற்கு:

           தன்னிடம் ஏதோ ஒரு தெய்வீகத்தன்மை இருப்பதாக மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக  யாரோ ஒரு மஹான் தினந்தோறும் தமது கனவில் தோன்றி ஆசி வழங்குவதாக கனவில் காணாததைக் கண்டதாக மக்களிடம் பொய் கூறுவர்.  

           தான் விரும்பும் பெண்ணை மணமுடித்துக் கொள்வதற்காக அந்தப் பெண்ணை தொடர்ந்து தமது கனவில் காட்டப்படுவதாக அல்லது பெண்ணுடைய தாய் - தந்தை அல்லது நெருங்கிய உறவினர்களில் யாராவது ஒருவர் மரணித்திருந்தால் அவர் தமது கனவில் தோன்றி அப்பெண்ணை மணமுடித்துக் கொள்ளும்படி வற்புருத்துவதாகக் கூறுவர்.

           தாய் அல்லது தந்தை தனது வேறொரு சகோதரனுக்கு வஸியத் செய்த சொத்துக்களில் வருமாணம் ஈட்டும் (விளைச்சல்) நிலத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தாய் அல்லது தந்தை தமது கனவில் தோன்றி உனக்குத் தான் இன்ன நிலத்தை தந்திருக்க வேண்டும் மாறாக உன் அண்ணனுக்கு கொடுத்தது தவறு என்று விடிய விடிய அழுது புலம்பியதாக அண்ணனிடம் கூறுவர். 

இப்படி பல வகைகளில் கனவில் காணாததைக் கண்டதாகக் கூறுவர். 

யாரும் யாருடைய உறக்கத்திற்குள் சென்று கனவுலகில் நீந்துவதை பார்க்க முடியாது என்றக் காரணத்தால் மனம் போன போக்கிற்கு விட்டடிப்பர்;.   

இதற்காகவே வராத கனவை வந்ததாகக் கூறுவதற்காக  இரவெல்லாம் விழித்திருந்து கற்பனை குதிரையின் கட்டுகளை அவிழ்த்து விட்டு வண்ண வண்ணமாக பொய் கனவை க்ரியேட் செய்து கொண்டே இருப்பர்.

அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதை மறந்து விட்டு அற்ப புகழுக்காக, அல்லது அகண்ட திட்டத்திற்காக கனவில் காணாததைக் கண்டதாகப் புளுகுவர். 

இது பல விளைவுகளையும், கொடிய தீமைகளையும் விளைவிக்கக் கூடிய பொய்யாகும்.  

இதை கேட்பவர் விபரமானவராக இருந்தால் கனவின் தரத்தையும், கூறுபவரின் தரத்தையும் பிரித்தறிந்து ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்வார், அலச்சியம் செய்வதை அலச்சியம் செய்து விடுவார்.

ஆனால் கேட்பவர் விபரம் கம்மியானவராக இருந்தால் கனவின் தரத்தையும், கூறுபவரின் தரத்தையும் விளங்கிக்கொள்ள முடியாமல் ஒரே அடியாய் கவிழ்ந்தே விடுவார்.

கனவு நுபுவ்வத்தின் ஒரு பகுதி.
கனவு நுபுவ்வத்தில் ஒரு பகுதி என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள். அதனால் வல்ல அல்லாஹ் தனக்கு விருப்பமான அடியார்களுக்கு நன்மை – தீமைகளை அறிவிப்பதற்காக கனவுகள் மூலம் உள்ளுணர்வுகளை ஏற்படுத்துகிறான்.

நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி.6993

நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என்ற அறிவிப்பை முஸ்லீம்கள் நம்புவதால் அந்த நம்பிக்கையை புருடா மன்னர்கள் தாங்கள் விரும்பியதை சாதித்துக் கொள்வதற்காக மிஸ் யூஸ் பண்ணுகின்றனர்.

இணைவைப்புக்கு பாலம் அமைத்த பொய் கனவு.
நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன் அதில் பச்சை தலைப்பாகையுடன், வெள்ளை நிற பைஜாமாவுடன், கையில் தஸ்பீஸ் மணியுடன், முகத்தில் பிரகாசமான ஒளியுடன் ஒருவர் தோன்றி இன்ன இடத்தில் என்னை அடக்கம் செய்யப்பட்டுள்ளது, நான் இன்ன பகுதியிலிருந்து ( அதாவது அரேபியப் பகுதி அல்லது அடுத்த மாநிலங்கலிளிருந்து ) இஸ்லாத்தை பரப்புவதற்காக வந்தேன் வந்த இடத்தில் கொல்லப்பட்டேன் (அல்லது இயற்கை மரணம் அடைந்தேன்) என்னை புதைக்கப்பட்ட இடத்தில் கபுரை உயர்த்தி (தர்ஹா) கட்டினால் உன்னைப் பிடித்த முஸீபத்தையும், இந்த ஊர் மக்களைப் பிடித்த முஸீபத்தையும் நீக்குவேன் என்று கனவில் கூறியதாகக் கூறி விடாப்படியாக நின்று தர்ஹா கட்டி விட்டனர்.

தமிழகத்தின் தர்ஹாக்களில் அடங்கி இருப்பதாக கூறப்படும் அவுலியாக்களில் அதிகமானோர் அந்தந்த மன்னின் மைந்தர்கள் இல்லை. இருக்கவும் மாட்டார்கள், இருந்தால் மக்கள் இலகுவாக விசாரித்து அவரது தரத்தை புரிந்து கொண்டு விலகிக் கொள்ளலாம் என்றுக் கருதி அரேபிய நாட்டை அல்லது அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு முஹைதீன் அப்துல் காதிர் ஜெய்லானி, நாகூர் சாகுல்ஹமீது பாஷா, ஏர்வாடி இப்ஹாஹீம் சாகிபு என்ற பட்டியல் நீளும்.  

கனவில் நடக்கும் மேஜர் ஆப்பரேஷன்.
இன்றும் மேல்படி தர்ஹாக்களில் நடைபெறுவதாக கூறப்படும் மராமத்து, கராமத்து வித்தைகள் அனைத்தும் கனவில் தான் நடக்கிறது, கனவுக்கு வெளியே நடப்பதில்லை.

ஹாட் ஆப்பரேஷன் தொடங்கி சாதாரண கட்டி ஆப்பரேஷன் வரை அனைத்து ஆப்பரேஷன்களும் அவுலியாக்களின் தர்ஹாக்களில் கனவில் தான் நடக்கும் அதுவும் கும்மிருட்டில் தான் நடக்கும். (நடந்ததாகக் கூறுவதற்கு சில கைத்தடிகள் அங்கேயே டேரா அடித்து தங்கி இருப்பார்கள் நான் இன்ன ஊரிலிலிருந்து வந்து சில நாட்களாக இங்கே தங்கினேன் பாவா கடந்த திங்கள்கிழமை என் கனவில் தோன்றி இந்த திங்கள் கிழமைக்கு தேதி அறிவித்து நேற்று இரவு ஒரு மணிக்கு கனவில் தோன்றி நல்ல மாதிரியாக ஆப்பரேஷன் செய்து விட்டார்கள் என்று புதிதாக வந்த அப்பாவிகளிடம் கூறுவர்), வேறொரு புதிய குரூப் வந்தால் அவர்களிடம் புளுக வேறொரு கைத் தடி தயாராகும்.   

ஏன் உங்கள் பாவா கனவில் தான் ஆப்பரேஷன் பண்ணுவாரா ? அதுவும் இரவு நேர கனவில் தான் பண்ணுவாரா என்று கேட்டால் ? 

கபுரில் அடங்கி இருப்பவர் இரவில் எழுந்து கனவில் தோன்றித் தான் ஆப்பரேஷன் செய்ய முடியும் ! கொஞ்சமாவது உங்களுக்கு காமன்சென்ஸ் இருந்தால் இதைப் புரிந்து கொள்வீர்கள் ?. தேவை இல்லாமல் மக்களை குழப்பாதீர்கள், அவுலியாக்களை அவமதிக்காதீர்கள் ?
என்று அவுலியா அபிமானிகள் சரவெடியாய் வெடித்து சிதறுவர்; ?.

இந்த சரவெடிக்கு சாதகமாக அமைந்தது நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்று என்ற அறிவிப்பை மிஸ் யூஸ் பண்ணுவது தான். 

அதனால் தான் காணாத கனவை கண்டதாகக் கூறாதீர்கள் என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன் சத்தியத்துடன் அனுப்பப்பட்ட (ஸல்) அவர்கள் கூறியதுடன் அது மாபெரும் பொய்களில் ஒன்று என்றுக் கூறி எச்சரிக்கை செய்தார்கள்.  

தம் கண் காணாத ஒன்றை (கனவை) அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும். என்று என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி. 7043. 

இஸ்லாம் தடை செய்த காரியத்தை மனித சமுதாயம் தடுத்துக் கொண்டால் கண்டிப்பாக அதில் நன்மை இருக்கும், தடுக்காமல் விட்டு விட்டால் அது தீமையை விளைவிக்கும் என்பதற்கு படைத்து பரிபாலிக்கின்ற ரப்புல் ஆலமீனுக்கே இணைவைக்கும் பெரும் பாவத்திற்கு பாலம் அமைத்துக் கொடுத்தது இந்த பொய் கனவு தான்.

''அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான்...என்றுக் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 4761.

சமுதயாத்தில் பேசப்படும் ஒவ்வொரு பொய்யும் கண்டிப்பாக உலக – மறுமை வாழ்வுக்கு பெரும் இழப்பையே உருவாக்கும் ஒருக்காலும் நன்மையை விளைவிக்காது என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன. 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

திங்கள், 6 மே, 2013

துரோகத்திற்கு கருவியாகும் பொய் சத்தியம்.

ஏக இறைவனின் திருப்பெயரால்....
إِن تَجْتَنِبُواْ كَبَآئِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلاً كَرِيمًا {31}

உங்களுக்குத் தடை செய்யப்பட்ட பெரும் பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால் உங்கள் தவறுகளை அழித்து விடுவோம். உங்களை மதிப்பு மிக்க இடத்தில் நுழையச் செய்வோம்.4:31

துரோகத்திற்கு கருவியாகும் பொய் சத்தியம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த கட்டுரைகளில் பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, பொய் சொல்லி வியாபாரம் செய்வது போன்ற பொய்யான செயல்கள் அனைத்தும் யூதர்களிடமிருந்தேப் பிறந்தது என்பதை விளக்கி இருந்தோம்.
பொய், யூதர்களின் கருவறையில் பிறந்து பல பிரிவுகளாக பிரிந்து சென்று பிற மதத்தவர்களின் மடியில் வளர்ந்தது என்றால் மறுக்க முடியாத உண்மை.
சீரிய இஸ்லாம் மார்க்கம் உலகுக்கு வருவதற்கு முன் மனித குலத்தில் மலிந்துக் கிடந்த மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் இஸ்லாமிய அறிவொலிக் கதிர்கள் உதயமாகி எரித்து சாம்பலாக்கியது. அவற்றில் பொய் பேசும் பழக்கமும் ஒன்று.
பொய்யை வேறோடும், வேறடி மண்ணோடும் இஸ்லாம் தான் ஒழித்துக் கட்டியது என்பதை கடந்த கட்டுரைகளிலும் பார்த்தோம், இனி வரும் கட்டுரைகளிலும் சில சம்பவங்களை காண்போம்.
23 வருட வாழ்க்கையில் தொடர் உபதேசங்கள்.
ஏகஇறைவனின் சத்தியத் தூதர்(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போதெல்லாம் பொய் பேசுவதனால் ஏற்படும் உலக-மறுமை இழப்புகளைக் கூறி பொய் எந்த வழியிலும், வேறு எந்த பெயரிலும் முஸ்லீம் சமுதாயத்திற்குள் நுழைந்து விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து உபதேசங்களை செய்து கொண்டே இருந்தார்கள்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பெரும்பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா ? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், 'ஆம் (தெரிவுயுங்கள்), அல்லாஹ்வன் தூதர் அவர்களே என்று கூறினர். 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் ஆகும் என்றார்கள்.
பின்னர் சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து கொண்டு , 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் பேசுவதும் (மிகப் பெரிம் பாவமே) என்றார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நாங்கள் அவர்கள் நிறுத்தமாட்டார்களா?' என்று நினைக்கும் அளவுக்குக் கூறிக் கொண்டே இருந்தார்கள் என்று அபூபக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 6274.
பெரும் பாவங்கள் அனைத்தும் நரகில் சேர்க்கக் கூடியவைகள் என்பதை மக்கள் அறிந்தே வைத்திருந்தனர்.
ஆனூலும் அதை நிருத்த மாட்டார்களா ? என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார்கள் என்றால் எந்தளவுக்கு பொய் பேசும் பழக்கமும், பொய்யான செயல்களும் சமுதயாத்தில் தீங்கு விளைவிக்கக் கூடியவைகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அந்த ஒரு தடைவ மட்டும் தொடர்ந்துக் கூறி விட்டு, அதன் பிறகு  விட்டு விட்டார்களா என்றால் ? அது தான் இல்லை, அண்ணல் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் கூறிக் கொண்'டே இருந்தார்கள் பொய்யான செயல்கள் நடக்கக் கண்டால் தடுத்துக் கொண்டிருந்தார்கள்.   
அபிவிருத்தியை தடுக்கும் பொய்யின் அடிப்படையிலான வியாபாரம்.
சிலர் வியாபாரத்தில் கூடுதல் லாபம் வைத்து விற்பதற்காக அந்த பொருள் தயாரிக்கப்படும் நாட்டையே மாற்றிக் கூறி விற்று விடுவார்கள் வாங்குவோர் நம்புவதற்காக பொய் சத்தியத்தையும் சேர்த்து செய்வார்கள்.
சத்தியம் செய்து அழுத்தம் கொடுத்துக் கூறியக் காரணத்தால் வாங்குவோரும் அதை நம்பி கேட்ட விலையைக் கொடுத்து வாங்கி விடுவார்கள்.
 லாபமும் பல மடங்கு கிடைத்து விடும் அது அவருக்கு இரட்டை சந்தோஷத்தை அளிக்கும், ஆனால் பொய் பேசி ஃப்ராடு செய்து அதன் மூலம் அடைந்த அந்த லாபமும், லாபத்தின் மூலம் அடைந்த அற்ப சந்தோஷமும் தற்காலிகமானது தான்.
ஏன் என்றால் ?
ஒவ்வொருவருடைய பொருளாதாரத்திலும் அவருக்கே அறியாமல் அளவற்ற அருலாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறான் அது பல மடங்காக பல்கிப் பெருகுகிறது. ஆனால் பொய் பேசி செய்த வியாபாரத்தின் லாபத்தில் அல்லாஹ் அபிவிருத்தியை ஏற்படுத்துவதில்லை.
ஏன் என்றால் ?
ஒருவர் மற்றவருடைய பொருளாதாரத்தை பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலான தொகையையோ ஏமாற்றி எடுத்துக்கொள்வதை அல்லாஹ் விரும்புவதில்லை கடுமையாக கண்டிக்கிறாகன்.
4:29. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! உங்களுக்கிடையே திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

ஹராமான வழியில் பொருளீட்டுவோரை, ஹராமான வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை அவருடைய கோரிக்கையை(துஆவை)யும் அங்கீகரிப்பதில்லை அதனால் பொய் பேசி செய்த வியாபாரத்தின் லாபத்தில் அபிவிருத்தி நிருத்தப்பட்டு விடுகிறது.
உண்மை பேசி வியாபாரம் செய்து அதன் மூலம் அடையும் 30 ரூபாய் லாபத்தை அல்லாஹ் நாடினால் அதில் 300 ரூபாய் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு அபிவிருத்தியை ஏற்படுத்தி விடுவான்.
ஆனால் 30 ரூபாய் கிடைக்க வேண்டிய லாபத்தை பொய் பேசி 90 ரூபாயாக (மும்மடங்காக) ஆக்கினால் அல்லாஹ்வின் அபிவிருத்தியும், அருளும் அகற்றப்பட்ட அந்த 90 ரூபாய் சாதாரண 10 ரூபாய்க்கான தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் மேலும் 900 ரூபாயை எதாவது ஒரு வழியில் இழக்கும் நிலை உருவாகலாம்.
விற்பவரும், வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவு படுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 2082.
இத்தனை உபதேசங்களையும் மீறி வியாபாரி ஒருவர் பொய் சத்தியம் செய்து தனது பொருளை அதிக லாபத்திற்கு விற்க முயன்றால் அவருக்கு மன்னிப்பே கிடையாது நரகம் தான் தண்டனை என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது.4:30  
எந்தளவுக்கு இஸ்லாம் பொய் பேசுவதையும், பொய்யான செயல்கள் புரிவதையும் தடுத்திருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.
துரோகத்திற்கு கருவியாக பயன்படுத்தும் பொய் சத்தியம்.
சிலர் எதிராளியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அல்லது பிடிக்காத மனைவியை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக அல்லது இன்னும் பிற சுயநல காரியங்களை அடைந்து கொள்வதற்காக பொய் சத்தியம் செய்வார்கள்.
இதனால் எதிராளி கவிழ்ந்து விடலாம், பிடிக்காத மனைவி ரத்து செய்யப்பட்டு விடலாம் துரோகத்திற்கும், சுயநலத்திற்கும் சத்தியத்தை கருவியாக பயன்படுத்தியக் காரணத்தால் அவர் வெற்றிப் பெற்று விடலாம்.
ஆனால் எந்த காரியத்துக்காக அவர் பொய் சத்தியம் செய்து வென்றாரோ அதில் அவரால் நிலைத்து நிற்க முடியாது என்பதுடன் அதுவே அவரை கவிழ்க்கும் கருவியாக மாறி விடும்.
நீங்கள் உங்களுடைய சத்தியங்களை உங்களுக்கிடையே துரோகத்திற்குக் கருவியாக்கி விடாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நிலை பெற்ற பின் (உங்களின்) பாதம் சரிந்துவிடும். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்த காரணத்தால் (இம்மையில்) துன்பத்தைத் அனுபவிப்பீர்கள்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 16:94), (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'தகல்' (துரோகம்) எனும் சொல்லுக்குச் சூழ்ச்சி, வஞ்சகம் என்று பொருள். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி. 6675.
சில குற்றங்களுக்கு உலகில் தண்டனை கிடைத்து விடும், சில குற்றங்களுக்கு மறுமையில் தண்டனை கிடைக்கும் எந்த குற்றத்திற்கு எங்கே தண்டனை கொடுப்பது சிறந்தது என்பதை எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தெளிவாக  அறிந்து வைத்திருப்பதால் அதனடிப்படையில் கொடுத்து வரம்பு மீறுவோருக்குப் பாடம் புகட்டுவான்.
அதனால் தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நிலை பெற்றப் பின் பாதங்கள் சரிந்து விடும் என்றுக் கூறியதுடன் இதை பெரும் பாவத்தின் பட்டியலிலும் சேர்த்தார்கள்.
பெரும் பாவங்களின் பட்டியலில் பொய் சத்தியமும் இருப்பதால் அற்ப ஆயுளில் வாழும் மனிதன் அற்ப சந்தோஷத்திற்காக சத்தியத்தை கருவியாக்கினால் ஒன்று உலகில் பாதங்கள் சறியலாம் அல்லது மறுமையில் மொத்த உடலும் நரகில் சறியலாம்.
ஆகவே பொய்சத்தியம் செய்து வியாபாரம் செய்வோரோ, பொய் சத்தியம் செய்து துரோகம் செய்வோரே அல்லாஹ்வின் தூதருடைய அழகிய உபதேசங்களையும், அல்லாஹ்வின் எச்சரிக்கையையும் ஏற்றுக் கொண்டு பெரும் பாவங்களிலிருந்து விலகிக் கொண்டு நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தடை செய்யப்பட்ட பெரும் பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால் உங்கள் தவறுகளை அழித்து விடுவோம். உங்களை மதிப்பு மிக்க இடத்தில் நுழையச் செய்வோம்.4:31
அழிவில் விளிம்பில் சென்றுக் கொண்டிருந்த மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட மனித குல மாணிக்கம் மாநபி (ஸல்) அவர்கள் வழி கேட்டில் தெளிவானதாக உள்ள பொய்யை இனம் கண்டு களை எடுத்தார்கள்.
அவர்களால் களை எடுக்கப்பட்ட பொய்யை அவர்களுடைய சமுதாயமே விதைத்து அறுவடை செய்ய நினைப்பது அல்லாஹ்வும், அவனுடைய தூதருடைய கட்டளையை காற்றில் பறக்க விடுவதற்கு சமமானதாகும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த ஒரு விஷயத்தில் கூறியதையே திரும்ப திரும்பக் கூறினார்களோ அது கடுமையான விஷயம் என்பதை அன்றைய சமுதாய மக்கள் விளங்கி இருந்தார்கள்.
அதனடிப்படையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அழுத்தம் கொடுத்துக் கூறும்  விஷயங்களில் ஏவிக் கொள்ள வேண்டியவற்றை ஏவிக் கொள்வார்கள், விலக்கிக் கொள்ள வேண்டியவற்றை விலக்கிக் கொள்வார்கள்.
இன்னும் தொடருவதற்கு தேவையான தகவல்கள் நிறைந்து இருப்பதால் இன்ஷா அல்லாஹ் தொடரும்...

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு  ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்.