திங்கள், 17 டிசம்பர், 2012

மாற்று மதத்தவர் உள்ளங்களிலும் கூட உண்மை பேசும் உத்தமர் எனும் முத்திரை பதித்த நபி.



ஏக இறைவனின் திருப்பெயரால்...


لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌحَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

33:21. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.318


அழகிய முன்மாதிரி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உலக மக்கள் அனைவரும் பின் பற்றி ஒழுக வேண்டிய அளவுக்கு அழகிய முன்மாதிரியைக் கொண்ட அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் முன் மாதிரிகளில் பொய் பேசிய நிகழ்வு நடந்ததே இல்லை.



அண்ணல் அவர்கள் ஏக இறைவனின் இறுதித் தூதராக தேர்வு செய்யப் படுவதற்கு முன்னரே அந்த மக்களிடம் அல்அமீன்- நம்பத் தகுந்தவர்> அஸ்ஸித்தீக்- உண்மை பேசுபவர் என்ற சிறப்பு பட்டத்தைப் பெற்றிருந்தார்கள்.



பொய்> புரட்டு> பித்தலாட்டம் போன்ற தீய பழக்கங்கள் கரை புரண்டோடிய கால கட்டத்தில் வாழ்ந்த மக்களிடத்தில் உண்மை பேசுபவராக> அனைத்து விஷயங்களிலும் மிகவும் நம்பிக்கைக்குரியவராக வாழ்ந்து காட்டினார்கள்.



அதனால் இறைச் செய்தி வந்திருக்கிறது நான் இறைவனின் தூதராக தேர்வு செய்யப் பட்டிருக்கிறேன் என்று அந்த மக்களிடம் கூறியதும் உண்மை பேசும் உத்தமரிடமிருந்து வந்த இந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ந்து போனார்கள், முன்னோர்களின் மதம் அழியப்போகிறதே நம்முடைய பதவியும்> பகட்டும் மண்ணை கவ்வப் போகிறதே என்று அச்சம் கொண்டார்கள்.  



முன்னோர்களின் மதத்தையும்> அவர்களின் பதவியையும் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்கள்.



அதனால் இறைச் செய்தியை மனமுரண்டாக புறக்கனித்தார்கள் முஹம்மது பொய் சொல்கிறார் என்று நினைக்க வில்லை. அந்தளவுக்கு அண்ணல் அவர்களின் உண்மை பேசும் நற்குணத்தின் மீது நம்பிக்கை கொண்டார்கள். 


அண்ணல் அவர்களை உண்மையாளர் என்று உலக முஸ்லீம்கள் நம்பியதை விட அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை புறக்கனித்தவர்களும், இறுதி வரை ஏற்க மறுத்தவர்களும் கூட அண்ணல் அவர்கள் பொய் பேச மாட்டார்கள், பேசியதில்லை என்பதை உறுதியுடன் நம்பினர்.



உறுதியுடன் நம்பினர் என்பதற்கு ஏராளமான நிகழ்வுகளை அடுக்கடுக்காக எடுத்து வைக்க முடியும் !



உதாரணத்திற்கு இஸ்லாத்தை மனமுரண்டாக எதிர்த்து அதை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட குழுவினரில் உமையாவும் ஒருவன்.  

அவனுடைய அடிமை பிலால் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்று விட்டார்கள் என்ற காரணத்துக்காக பிலால் (ரலி)அவர்களை அவன் செய்த சித்ரவதைகளை கேட்டவர்கள், படித்தவர்கள் யாருடைய உள்ளமும் வருந்தாமல் இருக்காது. கண்கள் கண்ணீரை சிந்தாமல் இருக்காது அந்தளவுக்கு மனசாட்சிக்கு திரையிட்டு அவர்களின் மீது சித்ரவதைகளை கட்டவிழ்த்து விட்டவன்.


ஆனால் அவனும் முஹம்மது (ஸல்) அவர்கள் பொய் பேச மாட்டார்கள் என்பதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்தான்

முஹம்மது (ஸல்) அவர்கள் பொய் பேச மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டும் கூறியவன் என்றால் நம்ப முடிகிறதா ? நம்புங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டேக் கூறினான்.



உண்மை பேசும் உத்தமர் என்பதை உண்மை படுத்திய முன்னறிவிப்பு.

உமையா விரைவில் கொல்லப்படுவான் என்ற செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஅத் (ரலி) அவர்களிடம் கூறி இருந்தார்கள்



ஒரு சந்தர்பப்த்தில் அவனை சந்தித்த முஅத் (ரலி) அவர்கள் இதை அவனிடமே சொல்லி விட்டார்கள். இதை கேட்ட மாத்திரத்தில் அவன் நடு நடுங்கிப் போய் விட்டான்.



அப்படியே நம்பினான் முஹம்மது பொய் சொல்ல மாட்டார் நான் கொல்லப்படுவது உண்மையாகவே இருக்கும் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறினான். அவனுடைய மனைவியும் அவ்வாறே அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறினாள்.



உண்மை பேசும் உத்தமரின் நாவிலிருந்து வெளியான வார்த்தைகளைக் செவியற்றதிலிருந்து உயிரைக் காக்க ஓடி ஒளிந்தான் என்ன என்னவோ செய்து பார்த்தான் இறுதியில் அவனுடைய உயிர் கொல்லப்பட்டேப்  பிரிந்தது.


உண்மை கூறும் உத்தம நபி(ஸல்) அவர்களுடைய வாக்கு சொன்னபடியே நிறைவேறியது. ( அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மது.)

  
...முஹம்மத்(ஸல்) அவர்கள் உன்னைக் கொல்லவிருப்பதாகச் சொல்ல கேட்டிருக்கிறேன்'' என்று உமய்யாவிடம் (முஆது ரலி அவர்கள்) கூறினார்கள். அதற்கு அவன், 'என்னையா (கொல்ல விருப்பதாகக் கூறினார்?)'' என்று கேட்டான். ஸஅத்(ரலி), 'ஆம் (உன்னைத் தான்)'' என்று பதிலளித்தார்கள். அதற்கவன், 'அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மது பேசினால் பொய் பேசுவதில்லை'' என்று சொல்லிவிட்டு நடந்த சம்பவத்தை ஓடோடி தன் மனைவியிடம் கூறினான் அதற்கு அவள், 'அப்படியென்றால் (அது உண்மையாகத்தானிருக்கும்.) அல்லாஹ்வின் மீதாணையாக! முஹமமது பொய் சொல்வதில்லை'' என்று சொன்னாள். மக்காவாசிகள் பத்ருப் போருக்குப் புறப்பட்டுச் செல்ல, போருக்கு அழைப்பவர் வந்(து மக்களை அழைத்)தபோது உமய்யாவிடம் அவனுடைய மனைவி, 'உம் யஸ்ரிப் நகரத் தோழர் சொன்னது உமக்கு நினைவில்லையா?' என்று கேட்டாள். எனவே, (பயத்தின் காரணத்தால்) அவன் போருக்குப் புறப்பட விரும்பவில்லை. அபூஜஹ்ல் அவனிடம், 'நீ (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்களில் ஒருவன். எனவே, (நீயே போரில் கலந்து கொள்ளாமல் போய்விட்டால் நான்றாக இருக்காது.) ஒரு நாளைக்கு அல்லது இரண்டு நாட்களுக்காவது போ(ய்க் கலந்து கொள்)'' என்று சொன்னான். அவ்வாறே அவனும் (இரண்டு நாள்களுக்காகச்) சென்றான். (அப்படியே அவன் போர்க்களம் வரை சென்று விட, அங்கே) அல்லாஹ் அவனைக் கொன்றுவிட்டான்.(ஹதீஸ் சுருக்கம்) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் புகாரி: 3632.


முஸ்லீமல்லாதவர்களின் உள்ளங்களிலும் கூட முஹம்மது(ஸல்) அவர்கள் பொய் பேச மாட்டார்கள் என்பதை ஆழமாகப் பதித்து விட்டு சென்றார்கள் உத்தம நபி(ஸல்) அவர்கள் என்பதற்கு மேற்காணும் சம்பவம் உலகம் முடியும் காலம் வரை சான்றுப் பகர்ந்து நிற்கிறது.  

இதிலிருந்து முஹம்மது (ஸல்) அவர்களின் பொய் பேசா நற்குணத்தை உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடை பிடிக்க வேண்டும்.

குறிப்பாக அவர்களை இறைதூதர் என்று சான்று பகர்ந்து இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லீம்கள் பின் பற்ற வேண்டும். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை .எம்.ஃபாரூக்